​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவில் ஆளில்லா வாகனம் செல்போன் கடைக்குள் புகுந்தது விபத்து

Published : May 03, 2018 11:53 PM

சீனாவில் ஆளில்லா வாகனம் செல்போன் கடைக்குள் புகுந்தது விபத்து

May 03, 2018 11:53 PM

சீனாவில் ஆளில்லா வாகனம் செல்போன் கடைக்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஜியாங்சு மாகாணத்தில் கடந்த மாதம் செல்போன் கடையின் நுழைவாயில் அருகே இருந்த கண்ணாடியை தள்ளிவிட்டபடி டிரக் ஒன்று உள்ளே நுழைந்தது. ஆனால் ஓட்டுநர் இருக்கையில் யாரையும் காணாததால் மர்மம் புரியாமல் கடையில் பணிபுரிபவர்கள் திகைத்து நின்றனர்.

image

சிறிது நேரத்தில் ஓட்டுநர் இருக்கைப் பகுதியில் இருந்து நாய் ஒன்று வெளியே வருவதைக் கண்ட கடையின் உரிமையாளர் டிரக்கின் உரிமையாளர் மீது புகாரளித்தார். விசாரணையில், நாயை ஓட்டுநர் இருக்கையில் அமர்த்திச் சென்றதோடு, எஞ்சினையும் நிறுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. ஹேண்ட் பிரேக் ரிலீஸ் செய்யப்பட்டதா? அல்லது, கீழே இருந்த கிளட்ச், ஆக்சிலேட்டர் உள்ளிட்ட பெடல்களை நாய் மிதித்ததா? என வாகனம் நகர்ந்ததற்கான காரணத்தில் குழப்பம் நீடிக்கிறது.