​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிறுவனங்களின் செயல்திறமையை பொறுத்தே ஒரு நாட்டின் பெருமை உள்ளது - நிர்மலா சீதாராமன்

Published : Nov 23, 2019 8:28 PM

நிறுவனங்களின் செயல்திறமையை பொறுத்தே ஒரு நாட்டின் பெருமை உள்ளது - நிர்மலா சீதாராமன்

Nov 23, 2019 8:28 PM

ஒரு நாட்டின் பெருமை அந்நாட்டில் உள்ள நிறுவனங்களின் செயல்திறமையை பொறுத்தே உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற சியூபி வங்கியின் 116வது ஆண்டு விழா துவக்கம் மற்றும் சியூபி வங்கியின் செல்போன் செயலி துவக்க விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த பின் மேடையில் பேசிய போது நிர்மலா சீதாராமன் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், மக்களின் தேவைகளுக்கு ஏற்ப வங்கி செயல்பட்டால் மக்கள் வங்கியை தேடி வரும் நிலை உருவாகும், அதுவே வங்கிகள் நேர்மையாக செயல்படவில்லை என்றால் அதில் பணம் போட்டு உள்ளவர், கடன் வாங்கியவர் உட்பட அனைவரும் பாதிக்கப்படுவார்கள் என கூறினார். எனவே வங்கிகளை திறமையாக கையாள வேண்டும் என தெரிவித்தார்.