​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் தொடக்க விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

Published : Nov 23, 2019 3:17 PM

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் தொடக்க விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

Nov 23, 2019 3:17 PM

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்று வரும் புதிய மாவட்டங்களுக்கான துவக்க விழா முன்னேற்பாட்டுப் பணிகளை அமைச்சர்கள், ஆர்.பி. உதயகுமார், கே.சி. வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் பார்வையிட்டனர்.

அண்மையில் வேலூர் மாவட்டத்தை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என மூன்றாகப் பிரித்து தமிழக அரசு அறிவித்தது. அதன்படி வரும் 28ஆம் தேதி புதிய மாவட்டங்களுக்கான துவக்க விழா, திருப்பத்தூர் தொன்போஸ்கோ பள்ளியில் நடைபெறவுள்ளது.

விழா முன்னேற்பாட்டுப் பணிகளை வருவாய்த்துறை செயலாளர், வருவாய்த்துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் சகிதம் அமைச்சர்கள் மூவரும் பார்வையிட்டனர். தொடர்ந்து ராணிப்பேட்டை சென்ற அமைச்சர்களும் அதிகாரிகளும் அங்கு நடைபெற்று வரும் விழா முன்னேற்பாட்டுப் பணிகளையும் பார்வையிட்டனர்.