​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
“விவசாயிகளிடமிருந்து தன்னம்பிக்கையை கற்றுக்கொள்ளவேண்டும்” - நிர்மலா சீதாராமன்

Published : Nov 23, 2019 3:03 PM

“விவசாயிகளிடமிருந்து தன்னம்பிக்கையை கற்றுக்கொள்ளவேண்டும்” - நிர்மலா சீதாராமன்

Nov 23, 2019 3:03 PM

விவசாயிகளிடமிருந்து அனைவரும் தன்னம்பிக்கையை கற்றுக்கொள்ளவேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ப.கிருஷ்ணன் எழுதிய, முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன்,புத்தகத்தை வெளியிட, முன்னாள் நீதியரசர் சதாசிவம் அதனை பெற்றுக்கொண்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆசிரியர் தினத்தை கொண்டாடவில்லை என்றாலும்கூட, ஆசிரியர்கள் காட்டும் நல்வழிகளை பின்பற்றினாலே வாழ்க்கை மேம்படும் எனத் தெரிவித்தார்.

விடாமுயற்சிக்கு விவசாயிகளே சிறந்த எடுத்துக்காட்டு எனக்கூறிய அவர், விளைச்சலில் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டாலும், அடுத்த பருவத்திற்கு நிலத்தை தயார் செய்யும் அவர்களிடமிருந்து நாம் தன்னம்பிக்கையை கற்றுக்கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.