​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வளைகுடா நாடுகளில் 5 ஆண்டுகளில் 34,000 இந்தியர்கள் உயிரிழப்பு

Published : Nov 22, 2019 3:31 PM

வளைகுடா நாடுகளில் 5 ஆண்டுகளில் 34,000 இந்தியர்கள் உயிரிழப்பு

Nov 22, 2019 3:31 PM

வளைகுடா நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 34 ஆயிரம் இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியுறவுத்துறை அதிர்ச்சி புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.

குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகளில் நாள்தோறும் சராசரியாக 15 இந்தியர்கள் உயிரிழப்புதாகவும் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள அவர், வளைகுடா நாடுகளில் 2014ஆம் ஆண்டு முதல் 33,988 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 4 ஆயிரத்து 823 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இருநாடுகளில்தான் அதிக அளவில் உயிரிழப்புகள் நேரிட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் உயிரிழக்கும் இந்தியர்களில் அதிகபட்சமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 1200 பேர் உயிரிழந்துள்ளனர்.