​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எதிர்பார்ப்பின் உச்சத்தில் இந்தியா - வங்கதேச பகல் இரவு ஆட்டம் - பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா

Published : Nov 22, 2019 11:18 AM

எதிர்பார்ப்பின் உச்சத்தில் இந்தியா - வங்கதேச பகல் இரவு ஆட்டம் - பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா

Nov 22, 2019 11:18 AM

முதல் பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்று களம் இறங்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கவுள்ள போட்டியில் இந்தியா வங்கதேசத்துடன் மோதவுள்ளது. பகல்-இரவு ஆட்டமாக இந்த போட்டி நடைபெறவுள்ளதால், சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில், வெஸ்ட் பெங்கால் கிரிக்கெட் வாரியம் சார்பில் கொல்கத்தாவின் முக்கிய கட்டிடங்களான டாடா சென்டர், பிக் பென் ஆன் லாக்டவுன், தி 42, எலியட் பார்க் மற்றும் சாஹித் மினார் ஆகியவை 3D மின்னொலியில் ஜொலிக்கின்றன.

கிரிக்கெட் ரசிகர்களை ஈர்ப்பதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெஸ்ட் பெங்கால் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியா - வங்கதேசம் மோதும் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டிய காண வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கொல்கத்தா வருகை தந்தார். அவரை விமான நிலையத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி நேரில் வரவேற்றார். மேலும் இந்த போட்டியை காண மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் வரவுள்ளார்.