​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்க அதிபர் டிரம்புடன் இம்ரான் கான் தொலைபேசியில் பேச்சு

Published : Nov 22, 2019 6:57 AM



அமெரிக்க அதிபர் டிரம்புடன் இம்ரான் கான் தொலைபேசியில் பேச்சு

Nov 22, 2019 6:57 AM

அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பை  தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஆப்கானிஸ்தானில் தாலிபனுடன் சமரசம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆப்கான் அமைதி முயற்சியில் பாகிஸ்தான் தொடர்ந்து பங்கேற்கும் என இம்ரான் கான் அப்போது உறுதியளித்துள்ளார். தாலிபனிடம் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பிணைக்கைதிகளாக சிக்கியிருந்த அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய பேராசிரியர்களான கெவின் கிங், திமோதி வீக்ஸ் ஆகியோரை விடுவிக்க பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கைகளை டிரம்ப் பாராட்டி பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்தார்.