​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு

Published : Nov 21, 2019 9:14 PM

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு

Nov 21, 2019 9:14 PM

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடர் மற்றும் ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகள் இடையேயான 3 இருபது ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறுகின்றன. இந்த 2 தொடர்களுக்கான இந்திய அணி, கொல்கத்தாவில் அறிவிக்கப்பட்டது.

இதில் 20 ஓவர் போட்டித் தொடருக்கான அணியில் முகம்மது சமி, புவனேசுவர் குமார் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். வங்கதேச தொடரில் அறிமுகமான சிவம் துபேக்கு, ஒருநாள் போட்டி அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தீபக் சாகரும், ஓராண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.