​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலகப் பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானிக்கு 12ஆவது இடம்

Published : Nov 21, 2019 5:16 PM

உலகப் பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானிக்கு 12ஆவது இடம்

Nov 21, 2019 5:16 PM

தொழிலதிபர் முகேஷ் அம்பானி, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 12ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்து, அதன் சந்தை மூலதன மதிப்பு நேற்று 10 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியது. இதன் மூலம் அந்நிறுவனம் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, உலகின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனங்கள் பட்டியலில் 6ஆவது இடத்தை பிடித்துள்ளது.

இதேபோல, 59.4 பில்லியன் டாலர்கள் நிகர சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 12ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 5 இடங்களில் பில்கேட்ஸ், ஜெஃப் பெசோஸ், பெர்னார்டு அர்னால்ட், வாரன் பஃபெட், மார்க் ஜுக்கர்பெர்க் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் விப்ரோ அதிபர் அசீம் பிரேம்ஜி 56ஆவது இடத்திலும், ஹெச்.சி.எல். ஷிவ் நாடார் 84ஆவது இடத்திலும் உதய் கோட்டக் 98ஆவது இடத்திலும் உள்ளனர்.