​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிதி நிறுவனங்கள் மோசடி செய்வதைத் தடுக்க புதிய மசோதாவுக்கு ஒப்புதல்

Published : Nov 21, 2019 6:38 AM

நிதி நிறுவனங்கள் மோசடி செய்வதைத் தடுக்க புதிய மசோதாவுக்கு ஒப்புதல்

Nov 21, 2019 6:38 AM

நிதி நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுவதைத் தடுக்கும் நிதி நிறுவன சட்டத்திருத்த மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.

மசோதா மீதான விவாதங்களுக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மையையும்,  சந்தாதாரர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கும் இந்த சட்டத்திருத்தம் உதவும் என குறிப்பிட்டார். சமீப காலங்களில் ஆயிரக்கணக்கானோர் நிதி நிறுவன மோசடிகளில் சிக்கி தங்கள் பணத்தை இழந்ததையும் நிர்மலா சீதாராமன் சுட்டிக் காட்டினார்.

புதிய சட்டத் திருத்தத்தின்படி, தனி நபராலும், 4 பேரை விட குறைவான பங்குதாரர்களாலும் நிர்வகிக்கப்படும் நிதி நிறுவனங்கள் வசூலிக்கும் தொகையை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்துவதற்கு மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதேபோல், 4 பேருக்கும் அதிகமான பங்குதாரர்களைக் கொண்ட சீட்டு நிதி நிறுவனம் வசூலிக்கும் தொகை 6 லட்சம் ரூபாயில் இருந்து 18 லட்சம் ரூபாயாக உயர்த்துவதற்கும் இந்த மசோதா பரிந்துரை செய்துள்ளது.