​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடப்பு நிதியாண்டில் ரூ.2,000 நோட்டுகள் பிடிபடுவது 43 விழுக்காடு சரிவு

Published : Nov 20, 2019 11:51 AM

நடப்பு நிதியாண்டில் ரூ.2,000 நோட்டுகள் பிடிபடுவது 43 விழுக்காடு சரிவு

Nov 20, 2019 11:51 AM

நாட்டில் வருமானவரித்துறை சோதனையின்போது சிக்கும் கணக்கில் வராத தொகையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்படுவது, தற்போதைய சூழலில், 43 விழுக்காடு அளவிற்கு, குறைந்திருப்பதாக, மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக, நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மூன்று நிதியாண்டுகளில், வருமானவரித்துறை சோதனையின்போது, 5 கோடிக்கும் மேலாக கைப்பற்றப்பட்ட ரொக்கம் தொடர்பான தரவுகள், ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், இதில், உயர் மதிப்புக் கொண்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்படுவது, ஆண்டுக்காண்டு சரிவை சந்திப்பது தெரியவந்திருப்பதாகவும், நிர்மலா தெரிவித்திருக்கிறார்.