​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொதுத்துறை வங்கிகளில் 6 மாதங்களில் 5,743 வங்கி மோசடிகள் - நிர்மலா சீதாராமன்

Published : Nov 20, 2019 8:08 AM



பொதுத்துறை வங்கிகளில் 6 மாதங்களில் 5,743 வங்கி மோசடிகள் - நிர்மலா சீதாராமன்

Nov 20, 2019 8:08 AM

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பொதுத்துறை வங்கிகளில் 95 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த எழுத்துப்பூர்வமாக பதிலில், ஆறே மாதங்களில் 5 ஆயிரத்து 743 வங்கி மோசடிகள் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வங்கி மோசடிகளைத் தடுப்பதற்காக விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாக செயல்பாட்டில் இல்லாத 3 லட்சத்து 38 ஆயிரம் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.