​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தன் மகள்களைக் கடத்தி வைத்திருப்பதாக நித்யானந்தா மீது போலீசில் புகார்

Published : Nov 20, 2019 7:27 AM



தன் மகள்களைக் கடத்தி வைத்திருப்பதாக நித்யானந்தா மீது போலீசில் புகார்

Nov 20, 2019 7:27 AM

தன் மகள்களைக் கடத்தி வைத்திருப்பதாக பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா கொடுத்த புகாரின் பேரில் ஜிகினா சாமியார் நித்தியானந்தா மீது 6 பிரிவுகளின் கீழ் குஜராத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்தியானந்தாவுக்கு எதிராக பெங்களூரூவை சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா என்பவர் புகார் கொடுத்துள்ளார். தனக்கு 19 மற்றும் 15 வயதுகளில் மகள்களும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இவர்களை பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்த்துள்ளார் ஜனார்த்தன் ஷர்மா. குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு ஜனார்த்தன் சென்று அழைத்துபோது, 3 பிள்ளைகளும் வீட்டுக்கு வர மறுத்ததாகவும், ஆசிரமத்தில் இருந்தவர்கள் இவரை விரட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜனார்த்தனின் மகள்களும், மகனும், குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் புறநகரில் உள்ள ஹிராபூரில் உள்ள ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தனது குழந்தைகளை அழைத்துவரச் சென்ற ஷர்மாவை, ஆசிரம நிர்வாகிகள் அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து,குஜராத் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பிடம் கடந்த 2ம் தேதி அவர் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இருந்த ஷர்மாவின் 15 வயது மகளையும், 13 மகனையும் மீட்டனர்.

தனது குழந்தைகளை கடத்திச் சென்று அடைத்து வைத்துள்ளதாக அகமதாபாத் விவேகானந்தா நகர் காவல் நிலையத்தில் ஜனார்த்தன ஷர்மா புகார் மனு அளித்தார். இதையடுத்து நித்யானந்தா மற்றும் அவரது உதவியாளர்கள் பிரியாதத்வா, பிரான்ப்ரியா ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக அகமதாபாத் புறநகர் காவல் கண்காணிப்பாளர் ஆர்.வி. ஆச்சாரி கூறியுள்ளார்.

இந்த நிலையில் தான் ஜனார்த்தன ஷர்மாவின் மகள் நித்யானந்திதா மா வெளியிட்டுள்ள வீடியோவில், நித்தியானந்தா ஆசிரமத்தில் தன் சுய விருப்பத்தின் பேரில்தான் தங்கி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் தனது பெற்றோரை சந்திக்க விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.