​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடியில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து உள்ளதால் - தொற்று நோய் பரவும் அபாயம்

Published : Nov 19, 2019 9:39 PM

தூத்துக்குடியில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து உள்ளதால் - தொற்று நோய் பரவும் அபாயம்

Nov 19, 2019 9:39 PM

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேங்கியுள்ள மழைநீருடன் கழிவுநீரும் கலந்து உள்ளதால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பால்பாண்டிநகர் மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் மழைநீர் குளம்போல் சாலையில் தேங்கி உள்ளது. மேலும் அங்கு கழிவுநீர் ஓடை வசதியில்லாததால் அந்த நீரும் மழைநீருடன் கலந்துள்ளது.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அதனை அகற்றி தார்ச்சாலை மற்றும் கழிவுநீர் ஓடை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.