​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து

Published : Nov 19, 2019 6:06 PM

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து

Nov 19, 2019 6:06 PM

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும், நிதிப் பங்கீட்டுக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால், சீர்மிகு பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு வழங்கும் ஆயிரம் கோடி ரூபாயில், தமிழக அரசின் பங்களிப்பாக 250 கோடி ரூபாயை பங்கிட்டுக்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்புதலை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு தமிழக உயர்கல்வித்துறை கடிதம் மூலம் தெரிவிக்க உள்ளது.