​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்ட முன்னாள் MLA ஆதரவாளர்

Published : Nov 19, 2019 11:22 AM



தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்ட முன்னாள் MLA ஆதரவாளர்

Nov 19, 2019 11:22 AM

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே பாஜக வேட்பாளருக்காக உயிரையும் தருவேன் எனக் கூறி அவரது ஆதரவாளர் ஒருவர் தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓசக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் எம்.டி.பி நாகராஜ், திங்கட்கிழமை ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது ஏராளமான பாஜக தொண்டர்களும், எம்.டி.பி நாகராஜின் ஆதரவாளர்களும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

அப்போது ஆதரவாளர் ஒருவர் வேட்பாளர் நாகராஜுக்காக தனது உயிரையும் கொடுப்பேன் எனவும், தான் அவரது உண்மை விசுவாசி எனவும் கூறி கத்தியால் தனது நெஞ்சில் குத்திக் கொண்டார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.