​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நித்யானந்தா ஆசிரமத்தில் 2 மகள்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தம்பதியர் மனு

Published : Nov 19, 2019 10:44 AM



நித்யானந்தா ஆசிரமத்தில் 2 மகள்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தம்பதியர் மனு

Nov 19, 2019 10:44 AM

நித்யானந்தா ஆசிரமத்தில்அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்களது இரு மகள்களை மீட்டுத் தருமாறு குஜராத் உயர்நீதிமன்றத்தில் தம்பதியர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

பெங்களூரிலுள்ள நித்யானந்தாவுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் 7 முதல் 15 வயதுடைய தங்களது 3 மகள்கள் மற்றும் மகனை கடந்த 2013ம் ஆண்டு சேர்த்ததாக கூறும் அந்த தம்பதியர், அவர்கள் நால்வரும் பெங்களூரிலிருந்து, அகமதாபாத்திலுள்ள கிளைக்கு மாற்றப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவர்களை பார்க்க அகமதாபாத் ஆசிரம ஊழியர்கள் அனுமதிக்காததால் போலீசாருடன் அங்கு சென்ற தம்பதியர், தங்களுடைய இளைய மகள் மற்றும் மகனை மட்டுமே மீட்க முடிந்ததாக தெரிவித்துள்ளனர்.

மூத்த மகள்கள் லோகமுத்ரா மற்றும் நந்திதா தங்களுடன் வர மறுத்து விட்டதாகவும், அவர்களை மீட்டுத் தரவேண்டும் எனவும் தம்பதிகளான ஜனார்த்தனா ஷர்மா மற்றும் அவரது மனைவி வழக்கு தொடர்ந்துள்ளனர்.