​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவின் முதல் முப்படை தலைவர் யார் என்பது டிசம்பரில் அறிவிப்பு?

Published : Nov 19, 2019 10:30 AM



இந்தியாவின் முதல் முப்படை தலைவர் யார் என்பது டிசம்பரில் அறிவிப்பு?

Nov 19, 2019 10:30 AM

இந்தியாவின் முதல் முப்படை தலைவர் யார் என்பது அடுத்த மாதத்தில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணுவம், விமானப்படை, கடற்படையை ஒருங்கிணைத்து தலைமை தாங்கும் வகையில் முப்படை தலைவர் பதவி உருவாக்கப்படும் என சுதந்திர தின உரையில் பிரதமர் அறிவித்தார்.

மேலும் அவர் நியமித்த, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான குழு, முப்படை தலைவரின் பொறுப்புகள், கடமைகள், அதிகாரங்கள் குறித்து வரையறுத்து வருகிறது.

இந்நிலையில், முப்படை தலைவர் என்பவர் மூன்று படைகளின் தளபதிகளுக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கக்கூடிய அதிகாரம் பொருந்தியவராக இருப்பார் என்று கூறப்படுகிறது. ராணுவத் தளபதி   பிபின் ராவத் டிசம்பர் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் சமயத்தில் முப்படை தலைவர் யார் என்பதும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.