​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு கத்திக்குத்து

Published : Nov 18, 2019 9:58 AM



கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு கத்திக்குத்து

Nov 18, 2019 9:58 AM

கர்நாடகாவில், காங்கிரஸ் எம்எல்ஏ தன்வீர் செய்ட் (Tanveer Sait) கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மைசூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த அவரை, கூட்டத்தில் இருந்த நபர், திடீரென பாய்ந்து கத்தியால் குத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்த காங்கிரஸ் எம்எல்ஏ தன்வீர் செய்ட், தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கூர்மையான கத்தியால் குத்திய ஃபர்ஹான் என்ற நபரை பிடித்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கித் தருமாறு கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்காததால், காங்கிரஸ் எம்எல்ஏவை கத்தியால் குத்தியதாக, பிடிபட்ட நபர், போலீசாரிடம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.