​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ பாப்டே பதவி ஏற்பு

Published : Nov 18, 2019 9:42 AM

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ பாப்டே பதவி ஏற்பு

Nov 18, 2019 9:42 AM

ச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே பதவியேற்றுக்கொண்டார்.  

குடியரசுத் தலைவர் மாளிகையில் 47ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டேவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்றதைத் தொடர்ந்து தனது தாயாரிடம் எஸ்.ஏ.போப்டே ஆசிபெற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 1956ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி பிறந்த சரத் அரவிந்த் போப்டே (Sharad Arvind Bobde) சட்டப் படிப்பை முடித்து வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார்.

முதன் முதலில் மும்பை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு பின்னர் படிப்படியாக உயர்ந்து 2012ஆம் ஆண்டு மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியானார். கடந்த 2013ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த 5 நீதிபதிகளில் இவரும் ஒருவர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக 18 மாதங்கள் பதவி வகிக்க உள்ள எஸ்.ஏ.போப்டே, வரும் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி ஓய்வுபெறுவார்.