​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடாது என என்னை மிரட்டுகிறார்கள் - நிர்மலா தேவி

Published : Nov 17, 2019 9:41 PM

நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடாது என என்னை மிரட்டுகிறார்கள் - நிர்மலா தேவி

Nov 17, 2019 9:41 PM

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி, தனக்கு போனில் தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக அவரது வழக்கறிஞரிடம் பேசுவது போன்ற ஆடியோ இணையத்தில் பரவி வருகிறது.

வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனிடம் பேசுவது போல் உள்ள அந்த ஆடியோவில் தன்னை நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடாது என்றும் மீறி ஆஜராக வந்தால் முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவோம் என்றும் சிலர் போனில் மிரட்டுவதாக அவர் கூறுகிறார்.

வீட்டில் தாம் இல்லாத நேரத்தில் பூட்டை உடைக்க மர்ம நபர்கள் முயற்சி செய்வதாகவும் கூறும் நிர்மலா தேவி, தன்னுடைய மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனநல மருத்துவமனையில் தம்மை சேர்த்துவிடுமாறும் கூறுகிறார்.

திங்கட்கிழமை ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய நிலையில் இந்த ஆடியோ வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.