​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாய்க்கால் கரை உடைந்து வயலுக்குள் புகுந்த தண்ணீர் - விவசாயிகள் கவலை

Published : Nov 17, 2019 9:32 PM

வாய்க்கால் கரை உடைந்து வயலுக்குள் புகுந்த தண்ணீர் - விவசாயிகள் கவலை

Nov 17, 2019 9:32 PM

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வாய்க்காலின் கரை உடைந்து தண்ணீர் விளைநிலங்களில் புகுந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்தது. தாமிரபரணி ஆற்றின் இரண்டு அணைக்கட்டுகளான மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுகளில் இருந்து சுமார் 5 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறி வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், முத்தாலங்குறிச்சி குளத்துக்கு வரும் வாய்க்காலில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக உடைப்பு ஏற்பட்டு, தண்ணீரானது அருகிலுள்ள வயல் வெளிக்குள் புகுந்துள்ளது.

குளத்தின் ஷட்டர் சரியில்லாத காரணத்தினால் குளத்தின் நீரும் வயலில் கலந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனை சரிசெய்யக் கோரும் விவசாயிகள், அணைக்கட்டுகளையும் நீர்வரத்து வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.