நியூயார்க்கில் நடந்த விழாவில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமெரிக்க வாழ் தமிழர்கள், தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று நியூயார்க் இந்திய தூதரகத்தில் உலக தமிழ் இளைஞர் பேரவை சார்பில் நடத்தப்பட்ட விழாவில் கலந்துகொண்டார். அப்போது, அமெரிக்காவில் வாழ்ந்துவரும் தமிழர்கள் தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.
இளைய தலைமுறையினரிடம் தொழில் தொடங்கும் எண்ணத்தையும் புதுமைச் சிந்தனைகளையும் உருவாக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.