வீடு புகுந்து நகை, பணத்தை திருடிய இளைஞர்களை சரமாரியாகத் தாக்கிய பொதுமக்கள்
Published : Nov 17, 2019 8:46 PM
வீடு புகுந்து நகை, பணத்தை திருடிய இளைஞர்களை சரமாரியாகத் தாக்கிய பொதுமக்கள்
Nov 17, 2019 8:46 PM
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடியதாகக் கூறப்படும் 2 இளைஞர்களை பிடித்து பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கினர்.
மாடம்பாக்கத்தில் சனிக்கிழமை இரவு அப்துல் ஹமீது என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 24 சவரன் நகை மற்றும் 54 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் திருடுபோயுள்ளது. இது தொடர்பாக போலீசில் புகாரளித்துள்ளனர்.
அப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த இம்ரான் மற்றும் மோகன்ராஜ் என்ற நபர்கள் மீது பொதுமக்களுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது.
அந்த சந்தேகத்தின் அடிப்படையில், அவர்கள் இருவரையும் பிடித்து மிரட்டிக் கேட்டபோது, அப்துல் ஹமீது வீட்டில் திருடியது தாங்கள்தான் என ஒப்புக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
ஆத்திரமடைந்த மக்கள், இருவரையும் பிடித்து கம்பு மற்றும் கயிற்றைக் கொண்டு சரமாரியாகத் தாக்கினர்.