ராணுவ ஒத்திகையை ஒத்திவைப்பதாக தென்கொரியா, அமெரிக்கா அறிவிப்பு
Published : Nov 17, 2019 7:37 PM
வடகொரியாவுடனான அமைதி முயற்சியை வலுப்படுத்தும் வகையில், விரைவில் நடத்த இருந்த ராணுவ ஒத்திகையை அமெரிக்காவும், தென்கொரியாவும் ஒத்திவைத்துள்ளன.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் இருநாடுகள் இடையேயான பேச்சுவார்த்தை தடைபட்டுள்ளது.
இந்நிலையில் தாய்லாந்தின் பாங்காக் நகரில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர்கள் சந்தித்து பேசினர். இதன்பின்னர், ராணுவ ஒத்திகையை தள்ளி வைப்பதாக அமெரிக்காவும், தென்கொரியாவும் கூட்டாக அறிவித்தன.