​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"திருப்பதி தேவஸ்தான கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இடம் ஒதுக்கீடு"

Published : Nov 17, 2019 7:19 PM

"திருப்பதி தேவஸ்தான கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இடம் ஒதுக்கீடு"

Nov 17, 2019 7:19 PM

திருப்பதி தேவஸ்தான கோரிக்கையை ஏற்று சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி கோயிலுக்கு மாமல்லபுரம் அருகே தமிழக அரசு சார்பில் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அதில், ஆகம விதிகளின்படி ஏதேனும் ஒரு இடத்தை தேவஸ்தான நிர்வாகம் தேர்வு செய்து கொள்ளலாமென அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தியாகராய நகரில் வீற்றிருக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 30 உறுப்பினர்களின் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், தியாகராய நகரில் உள்ள திருப்பதி கோயில் விரிவாக்கத்திற்கு போதிய இடம் ஒதுக்கித்தர, திருப்பதி தேவஸ்தானம் வைத்த கோரிக்கையை ஏற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.