​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஏசியான் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் ராஜ்நாத்சிங்

Published : Nov 17, 2019 5:58 PM

ஏசியான் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் ராஜ்நாத்சிங்

Nov 17, 2019 5:58 PM

பாங்காக்கில் நடைபெற்றுவரும் ஏசியான் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள அமைச்சர் ராஜ்நாத்சிங், நிலையான பாதுகாப்பை உறுதி செய்ய உறுப்பு நாடுகள் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பாக இருக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

2019ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு கண்காட்சி மற்றும் ஏசியான் உறுப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாடு, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று தொடங்கியது.

இதில் பங்கேற்ற இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிலையான பாதுகாப்பைப் பெற உறுப்பு நாடுகள் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பாக இருக்க வேண்டுமென்று கூறினார்.

இன்று, அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர், ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் தாரா கோனா, நியூசிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ரான் மார்க் ஆகியோரை ராஜ்நாத்சிங் சந்தித்துப் பேசினார்.