​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுற்றுலா பட்டியலில் கொடைக்கானல் பேத்துப்பாறை கல் திட்டைகள்: மக்கள் மகிழ்ச்சி

Published : Nov 17, 2019 5:20 PM

சுற்றுலா பட்டியலில் கொடைக்கானல் பேத்துப்பாறை கல் திட்டைகள்: மக்கள் மகிழ்ச்சி

Nov 17, 2019 5:20 PM

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமத்தில் உள்ள ஆதிமனிதன் கல் திட்டைகள் சுற்றுலா பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொடைக்கானல் மலையில் பேத்துப்பாறை கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக, கல் குகைகள், கல்திட்டைகள் உள்ளன.

இவற்றை மத்திய தொல்லியல் துறை பாதுகாத்து வரும் நிலையில், தற்போது திண்டுக்கல் மாவட்ட சுற்றுலா தலங்கள் கையேட்டில் பேத்துப்பாறை கல் திட்டைகள் இடம்பெற்றுள்ளதாக சுற்றுலா இயக்குனர் அமுதவள்ளி தெரிவித்துள்ளார்.

அப்பகுதியை மேம்படுத்தும் விதமாக தரமான சாலைகள், சுற்றுலாப்பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.