​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
3 மாதங்களுக்கு தேவைப்படும் அரிசி இருப்பு வைப்பு - அமைச்சர் காமராஜ்

Published : Nov 17, 2019 5:09 PM

3 மாதங்களுக்கு தேவைப்படும் அரிசி இருப்பு வைப்பு - அமைச்சர் காமராஜ்

Nov 17, 2019 5:09 PM

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 3 மாதங்களுக்கு தேவைப்படும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , தமிழகத்துக்கு கூடுதலாக தேவைப்படும் மண்ணெண்ணெய்  குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கான்கீரிட் வீடுகள் கட்டிதருவதற்கான ஆரம்ப கட்டபணிகள் நடப்பதாகவும், அவை முடிந்தவுடன் 3லட்சத்திற்கும் குறைவாக வருமானம் உள்ளவர்களுக்கு வீடுகள் கட்டிதரப்படும் என்றும் கூறினார்.