​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குமரகுரு எம்எல்ஏ இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் பங்கேற்பு

Published : Nov 17, 2019 4:38 PM

குமரகுரு எம்எல்ஏ இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் பங்கேற்பு

Nov 17, 2019 4:38 PM

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற குமரகுரு எம்எல்ஏ இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்தி பேசினார்.

உளுந்தூர்பேட்டை தொகுதி எம்எல்ஏவும் விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக  செயலாளருமான  இரா.குமரகுருவின் மகள் இலக்கியா, சேலம் உடையான்பட்டியை சேர்ந்த கிருஷ்ணகுமார், சுபா தம்பதியினரின் மகன் ராம்பிரசாத் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா, இன்று நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், அன்பழகன், வீரமணி, சிவி சண்முகம், அதிமுக பொருளாளர் பொன்னையன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிகவின் சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் மணமக்களை வாழ்த்தி முதலமைச்சர் பேசினார்.