​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாலையோரம் நின்றுகொண்டிருந்த இளைஞரை காரில் கடத்திய கும்பல்

Published : Nov 17, 2019 4:12 PM

சாலையோரம் நின்றுகொண்டிருந்த இளைஞரை காரில் கடத்திய கும்பல்

Nov 17, 2019 4:12 PM

கர்நாடக மாநிலம் ரைச்சூர் அருகே இளைஞர் ஒருவரை கத்தி மற்றும் துப்பாக்கி முனையில் ஒரு கும்பல் காரில் கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சனிக்கிழமை மதியம் லின்சாகூர் பேருந்து நிலையம் எதிரே சாலையோரம் உள்ள நடைபாதையில் இளைஞர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த வெள்ளை நிற கார் ஒன்றில் இருந்து 4 இளைஞர்கள் இறங்கினர். நடைபாதையில் நின்றுகொண்டிருந்த இளைஞரிடம் சகஜமாக பேச்சு கொடுத்தவாறே அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று காரில் ஏற்ற முயன்றனர். சுற்றியிருந்தவர்கள் இதனை தடுக்க முயன்றபோது, கத்தி மற்றும் துப்பாகியைக் காட்டி அவர்கள் மிரட்டிவிட்டு அவரைக் கடத்திச் சென்றுள்ளனர்.

கடத்தப்பட்ட இளைஞர் மற்றும் கடத்தியவர்கள் குறித்த விவரங்கள் தெரியாத நிலையில், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.