​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு வாய்ப்பு: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Published : Nov 17, 2019 3:31 PM

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு வாய்ப்பு: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Nov 17, 2019 3:31 PM

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள மல்லியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்எல்ஏ சந்திரபிரபா, சாத்தூர் தொகுதி எம்எல்ஏ ராஜவர்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய  அமைச்சர், கம்யூட்டர் காலம் என்பதால்  இளைஞர்களை தேர்வு செய்து, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார். மேலும் திமுகவில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூட ஆள்கள் இல்லை என்றும் அமைச்சர் விமர்சித்தார்