​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் பார்வையாளர்களை கவரும் வெளிநாட்டுப் பறவைகள்

Published : Nov 17, 2019 1:19 PM

தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் பார்வையாளர்களை கவரும் வெளிநாட்டுப் பறவைகள்

Nov 17, 2019 1:19 PM

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக போதிய மழையின்றி வறண்டு காணப்பட்ட தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் பருவமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் வெளிநாட்டுப் பறவைகள் திரண்டு வரத் துவங்கியுள்ளன.

வறட்சி மாவட்டம் எனப் பெயர் பெற்றிருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன என்பது வியப்புக்குரிய செய்திதான். (( GFX IN )) தேர்த்தங்கல், மேல செல்வனூர், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி, சக்கரைக்கோட்டை ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன.

இந்தச் சரணாலயங்களுக்கு, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து கூழைக்கடா, கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை, செங்கால் நாரை உள்ளிட்ட ஏராளமான பறவை இனங்கள் வந்து தங்கிச் செல்கின்றன. அக்டோபர் மாதம் துவங்கி, மார்ச் மாதம் வரை இந்தப் பறவைகள் இடம்பெயர்ந்து வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

பருவ நிலை மாற்றங்களை அனுபவிக்க வரும் இந்த அரிய வகை வெளிநாடு வாழ் பறவைகள் கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழையின்றி நீர் நிலைகள் வறண்டு காணப்பட்டதால் தவித்துப் போயின.

பாலம் பாலமாக வெடித்திருந்த நீர் நிலைகளில் ஆங்காங்கே தேங்கியிருந்த கலங்கலான தண்ணீரை தேடி அலையும் நிலைக்கு பறவைகள் தள்ளப்பட்டன. பறவைகளின் இந்த நிலையைக் கண்ட வனத்துறையினர், மழைக்காலத்துக்கு முன்னதாகவே நீர்நிலைகளை தூர்வாரும் நடவடிக்கைகளில் இறங்கினர்.

குறிப்பாக தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு முறையாக பராமரித்தும் வந்ததால், கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.

எழில் கொஞ்சும் இந்த சூழலை அனுபவிக்க 50 வகையான 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்து குவிந்துள்ளன. தேர்த்தங்கல் சரணாலயத்தில் இதே பராமரிப்பையும் பாதுகாப்பையும் எப்போதும் வழங்க வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.