​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதி லட்டு விலை உயர்தபடமாட்டாது..!

Published : Nov 17, 2019 1:16 PM

திருப்பதி லட்டு விலை உயர்தபடமாட்டாது..!

Nov 17, 2019 1:16 PM

திருப்பதியில் மானிய விலையில் வழங்கப்படும் லட்டுகளின் விலை உயர்த்தப்படமாட்டாது என தேவஸ்தான குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், லட்டு விலை உயர்த்தப்பட இருப்பதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்தி எனக் கூறினார். மேலும் விலையை உயர்த்த கருத்துருக்கள் பெறப்பட்டதாகவும், ஆனால் அவற்றை தேவஸ்தான நிர்வாகம் கருத்தில் கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் இலவசமாக வழங்கப்படும் லட்டுகள் தொடர்ந்து வழங்கப்படுவதோடு, மானிய விலையில் விற்பனை செய்யப்படும் லட்டுகள் அதே விலையிலேயே தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என கூறினார்.