​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெள்ளப்பெருக்கால் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத்தடை

Published : Nov 17, 2019 10:25 AM

வெள்ளப்பெருக்கால் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத்தடை

Nov 17, 2019 10:25 AM

குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கு குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனால், விடுமுறை தினமான இன்று ஆர்பரித்துக் கொட்டும் அருவியில் ஆவலுடன் குளிக்க வந்த சுற்றுலாப்பயணிகளும், கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி மெயின் அருவியில் புனித நீராட குவிந்த ஐயப்ப பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

அதேவேளையில், பழையகுற்றாலம், புலி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீராக கொட்டுவதால், அங்கு சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதிகளில் கூட்டம் அலைமோதுகிறது.