​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து - தாய், மகன், மகள் பலி

Published : Nov 17, 2019 9:35 AM

இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து - தாய், மகன், மகள் பலி

Nov 17, 2019 9:35 AM

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

வெள்ளையூர் மணக்காடு பகுதியை சேர்ந்த சந்திரா என்பவர், தனது மகன் மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் தெடாவூர் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது விரகனூர் அருகே எதிரே வந்த தனியார் பேருந்து அவர்களது இருசக்கர வாகனத்தில் மோதியதில், அதில் பயணித்த மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

விபத்துக்குள்ளான தனியார் பேருந்தின் ஓட்டுநர், விரகனூர் காவல்நிலையத்தில் பேருந்தை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. விபத்து தொடர்பாக கெங்கவல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.