​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடந்த 9 ஆண்டுகளாக தமிழகம் மிகப்பெரிய பள்ளத்தில் விழுந்து கிடக்கிறது - மு.க.ஸ்டாலின்

Published : Nov 17, 2019 8:39 AM

கடந்த 9 ஆண்டுகளாக தமிழகம் மிகப்பெரிய பள்ளத்தில் விழுந்து கிடக்கிறது - மு.க.ஸ்டாலின்

Nov 17, 2019 8:39 AM

கடந்த 9 ஆண்டுகளாக தமிழகம் மிகப் பெரிய பள்ளத்தில் விழுந்து கிடப்பதாகவும், அதனை மீட்க திமுக போராடும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் நேற்று திமுக சார்பில் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக தருமபுரியில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், மத்திய - மாநில அரசுகள் மக்கள் பிரச்னையில் தகுந்த கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் பேசிய அவர் தாம் மக்கள் நலனுக்காக சிறைக்கு சென்றதாக குறிப்பிட்டார்.