​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெளிநாடு சென்று சிகிச்சை பெற நவாஸ் ஷெரீப்புக்கு அனுமதி

Published : Nov 16, 2019 8:45 PM

வெளிநாடு சென்று சிகிச்சை பெற நவாஸ் ஷெரீப்புக்கு அனுமதி

Nov 16, 2019 8:45 PM

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளிநாடு சென்று சிகிச்சை பெற லாகூர் உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

ஊழல் வழக்குகளில் கைதாகி சிறையில் இருந்த நவாஸின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவருக்கு நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கின. இதையடுத்து வெளிநாடு சென்று சிகிச்சை பெற பாகிஸ்தான் அரசிடம் அனுமதி கோரினார். இதற்கு பாகிஸ்தான் அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது.

இதனால் லாகூர் உயர்நீதிமன்றத்தில் நவாஸின் சகோதரர் ஷாபாஸ் வழக்குத் தொடுத்தார். அதை விசாரித்த லாகூர் உயர்நீதிமன்றம், நவாஸ் வெளிநாடு சென்று 4 வாரம் சிகிச்சை பெற அனுமதித்தும், பாகிஸ்தான் அரசின் நிபந்தனைகளை தள்ளுபடி செய்தும், தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நவாஸின் பெயரை நீக்கும்படியும் உத்தரவிட்டது.