​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கார் மோதியதில் இருவர் படுகாயமடைந்ததால் உறவினர்கள் ஆவேசம்

Published : Nov 16, 2019 5:13 PM

கார் மோதியதில் இருவர் படுகாயமடைந்ததால் உறவினர்கள் ஆவேசம்

Nov 16, 2019 5:13 PM

ஈரோடு மாவட்டம் பவானி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருவர் படுகாயமடைந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஓட்டுநரை தாக்கிவிட்டு, பெரிய கற்களை கொண்டு கார் கண்ணாடி மற்றும் கதவுகளை உடைத்து சேதப்படுத்தினர்.

நரிப்பள்ளம் பகுதியில் சென்று கொண்டிருந்த வாடகை கார் ஒன்று எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆருன் மற்றும் முகமதுநவாஸ் காயமடைந்தனர்.

அதனால் ஆத்திரமடைந்த அவர்களின் உறவினர்கள் கார் ஓட்டுநர் துரைராஜை தாக்கியதுடன், கார் மீது ஏறி நின்று பெரிய கற்களை கொண்டு அதன் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.