​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குன்னுர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவு - சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்

Published : Nov 16, 2019 4:37 PM



குன்னுர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவு - சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்

Nov 16, 2019 4:37 PM

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடும் பனிப்பொழிவு காரணமாக இயற்கைகாட்சிகளை கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால், வாகனங்களை மெதுவாக இயக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளதால், முகப்பு விளக்குகளுடன் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் உதகை - குந்தா வழியாக கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 மீட்டர் தூரத்திற்கு சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

கனமழையால், குன்னூர் அருகே ஆடர்லி பகுதியில் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், இன்று ஒருநாள் மட்டும் மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.