​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிஆர்பி கிரானைட் நிறுவனத்தின் மனு தள்ளுபடி

Published : Nov 16, 2019 10:17 AM



பிஆர்பி கிரானைட் நிறுவனத்தின் மனு தள்ளுபடி

Nov 16, 2019 10:17 AM

பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவனம் மீண்டும் குவாரிகளை இயக்க அனுமதி கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.

அந்நிறுவன பங்குதாரர் செந்தில்குமார் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் பிற கிரானைட் குவாரிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் கிரானைட் கற்கள் கொள்முதல் செய்து, விற்க அனுமதிக்க வேண்டும் என கேட்டிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், குவாரிகள் நடத்தியதில் மனுதாரர் முறைகேடுகளில் ஈடுபட்டு அரசுக்கு 4 ஆயிரத்து 124 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுவதை சுட்டிக்காட்டினார்.

இதே கோரிக்கையுடன் மனுதாரர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யபட்டுள்ளதை சுட்டிக்காட்டி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.