​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வங்கி டெபாசிட் தொகைக்கான காப்பீடு உயர்த்தப்படும் - நிர்மலா சீதாராமன்

Published : Nov 15, 2019 9:28 PM

வங்கி டெபாசிட் தொகைக்கான காப்பீடு உயர்த்தப்படும் - நிர்மலா சீதாராமன்

Nov 15, 2019 9:28 PM

வங்கி டெபாசிட்டுகளுக்கான காப்பீடு, ஒரு லட்சம் ரூபாயில் இருந்து உயர்த்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஞ்சாப் மகாராஷ்டிரா வங்கியில் நடைபெற்ற கடன் மோசடியால், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அந்த வங்கி நிறுவனர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது குறித்து ரிசர்வ் வங்கியிடம் ஆலோசித்ததாக குறிப்பிட்டார்.

வங்கியில் செய்யப்படும் டெபாசிட் பணத்திற்கான காப்பீட்டை அதிகரிக்கவும், கூட்டுறவு வங்கிகளை முறைப்படுத்தவும் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சட்டம் கொண்டு வரப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.