புதுச்சேரி அருகே 8 மீனவர்களுடன் சென்ற படகு ஒன்று பழுதான நிலையில், அது சிறிது சிறிதாக கடலில் மூழ்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரி வீராம்பட்டினத்தைச் சேர்ந்த சாமிநாதன், பிரசாந்த் உள்ளிட்ட 8 மீனவர்கள் வியாழக்கிழமை இரவு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது, முதலியார்சாவடி கடல் பகுதியில் அதிகாலை 4 மணியளவில் படகின் என்ஜின் பகுதியில் திடீரென ஓட்டை விழுந்து, கடல்நீர் புகுந்துள்ளது.
மீனவர்கள், கொடுத்த தகவலின்படி சிறிய படகுகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த சக மீனவர்கள் 8பேரையும் பத்திரமாக மீட்டனர். இந்நிலையில், ஓட்டை விழுந்த படகு கடலுக்குள் முழுவதும் மூழ்கியது.