​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தென்காசி கேபிள் டி.வி. ஆபரேட்டர் சங்கத் தலைவர் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேருக்கு ஆயுள் ரத்து

Published : Nov 15, 2019 7:30 PM

தென்காசி கேபிள் டி.வி. ஆபரேட்டர் சங்கத் தலைவர் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேருக்கு ஆயுள் ரத்து

Nov 15, 2019 7:30 PM

தென்காசியில் நடைபெற்ற கொலை வழக்கில், 3 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது.

நெல்லை மாவட்டம் தென்காசியில், கேபிள் டி.வி. ஆபரேட்டர் சங்க தலைவராக இருந்த முகமது மைதீன், கடந்த 2009 ம் ஆண்டு படுகாலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான முருகன், தம்புரான் என்கிற கிருஷ்ணன், பொன்னையா ஆகிய 3 பேருக்கும் ஆயுள்தண்டனை விதித்து, வகுப்புவாத மோதல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, சிறப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.