​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய அணியின் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நேரில் கண்டுகளிக்க உள்ளார் அமித் ஷா

Published : Nov 14, 2019 5:20 PM

இந்திய அணியின் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நேரில் கண்டுகளிக்க உள்ளார் அமித் ஷா

Nov 14, 2019 5:20 PM

கொல்கத்தாவில் நடைபெற உள்ள இந்திய அணியின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியின் துவக்க நாள் ஆட்டத்தை, உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் கண்டுகளிக்க உள்ளார்.

பிசிசிஐயின் தலைவராக பொறுப்பேற்றுள்ள கங்குலியின் முயற்சியால், வங்கதேச அணிக்கு எதிராக நவம்பர் 22-ம் தேதி நடைபெற உள்ள இந்திய அணியின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது.

இது இந்திய அணி பங்குபெற உள்ள முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியாகும். இந்நிலையில் இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் மைதானத்திற்கு வருகின்றனர்.