​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆட்டோ ரேசில் ஈடுபட்டதில் ஒருவர் உயிரிழப்பு

Published : Nov 14, 2019 4:48 PM

ஆட்டோ ரேசில் ஈடுபட்டதில் ஒருவர் உயிரிழப்பு

Nov 14, 2019 4:48 PM

சென்னையில் நடத்தப்பட்ட ஆட்டோ ரேசின்போது ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் ரேசில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் அடிப்பட்டதாக கூறி வில்லிவாக்கத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கவே, பிரபாகரனுக்கு அடிப்பட்டது குறித்து அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், ஆட்டோ மெக்கானிக்கான பிரபாகரன் அடிக்கடி ரேசில் ஈடுபட்டு வந்ததும், நேற்று போரூர் சுங்கச்சாவடியில் இருந்து தாம்பரம் வரை ரேஸ் நடத்தியதும் தெரிய வந்தது.

மேலும், இந்த ரேசில் ஈடுப்பட்ட பிரபாகரன் வேகமாக ஓட்டி சென்ற ஆட்டோ, முன்னே சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தததையடுத்து மருத்துவமனையில் அனுமதித்ததாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஆட்டோ ரேசில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.