​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தை வெளியிட இடைக்கால தடை

Published : Nov 14, 2019 4:32 PM



சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தை வெளியிட இடைக்கால தடை

Nov 14, 2019 4:32 PM

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற நடுவர் மையம் இடைக்கால தடை விதித்துள்ளது.

"ஹீரோ" படத்தை தயாரித்த 24 ஏஎம் பிலிம்ஸ் நிறுவன பங்குதாரர்களான ராஜா, பிரபு, ஜெயதேவி ஆகியோர் டி.எஸ். ஆர் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் கிளடட்ஸ் பேட்ரிக் ஹென்றியிடம் 10 கோடி ரூபாய் கடனாக பெற்றதாகவும், ஆண்டுக்கு 24 சதவீதம் வட்டியுடன் 10 மாதங்களில் கடனை திருப்பி செலுத்துவதாக கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதன்படி பணத்தை அவர்கள் திருப்பி செலுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனிடையே, ஹீரோ படத்தை, கே.ஜே.ஆர் பிலிம் நிறுவனத்தின் மூலமாக வெளியிட 24 ஏஎம் பிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அப்படத்தை வெளியிட தடைகோரியும், கடன் தொகையை வட்டியுடன் வழங்க உத்தரவிடகோரியும டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் வழக்கு தொடுத்தது. இதை விசாரித்த நடுவர் மையம், ஹீரோ படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது. மேலும் விசாரணையை டிசம்பர் 2- ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.