​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தகுதி நீக்கத்திற்குள்ளான 16 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர்

Published : Nov 14, 2019 4:14 PM

தகுதி நீக்கத்திற்குள்ளான 16 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர்

Nov 14, 2019 4:14 PM

கர்நாடகத்தில் எம்.எல்.ஏ. பதவியை இழந்தவர்களில் 16 பேர் பாஜகவில் இணைந்த நிலையில், அவர்களை எதிர்கால எம்.எல்.ஏ.க்கள் என்றும் அமைச்சர்கள் என்றும் அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா குறிப்பிட்டார்.

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் அணி மாறியதால், கர்நாடகத்தில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.

அம்மாநில பாஜக மூத்த தலைவரான எடியூரப்பா ஆட்சியைக் கைப்பற்றினார். இந்த நிலையில், அணி மாறியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 16 பேர் இன்று பெங்களூருவில் எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

அப்போது பேசிய எடியூரப்பா, 17 பேர் செய்த தியாகத்தால் தான் தாம் ஆட்சி அமைக்க முடிந்ததாகக் குறிப்பிட்டார். அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று கூறிய எடியூரப்பா, துரோகம் இழைக்க மாட்டோம் என்று உறுதி அளித்தார்.