​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதி லட்டு.. சலுகை விலை ரத்து..!

Published : Nov 14, 2019 2:56 PM

திருப்பதி லட்டு.. சலுகை விலை ரத்து..!

Nov 14, 2019 2:56 PM

திருப்பதி கோவிலில் சலுகை விலையில் லட்டுகள் வழங்குவது ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் 1 லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்கிறார்கள். 300 ரூபாய் டிக்கெட் தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு இலவசமாக 2 லட்டுகள் வழங்கப்படுகின்றன.

இரு மலைப்பாதைகளில் நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டும், சலுகை விலையில்  20 ரூபாய்க்கு 2 லட்டுகளும், கூடுதல் லட்டுகள் தேவைப்படுவோருக்கு  50 ரூபாய்க்கு 2 லட்டுகளும் வழங்கப்பட்டு வந்தன. ஒரு லட்டுவின் எடை 160 கிராமில் இருந்து 180 கிராமுக்குள் இருக்கும்.

ஒரு லட்டு தயார் செய்ய  40 ரூபாய் செலவாகிறது என்றும், பக்தர்களுக்கு சலுகை விலையிலும், இலவசமாகவும் லட்டுகள் வழங்கப்படுவதால், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு 241 கோடியே 20 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதை ஈடுகட்ட சலுகை விலையில் லட்டுகள் வழங்கும் நடைமுறை விரைவில் ரத்து செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு பதிலாக, அனைத்துத் தரிசன பக்தர்களுக்கும் தலா ஒரு லட்டு வீதம் இலவசமாக வழங்கவும், அதற்குமேல் கூடுதலாக லட்டுகள் தேவைப்படுவோருக்கு ஒரு லட்டு 50 ரூபாய்க்கு விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வரலாம் என திருமலை-திருப்பதி தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருமலை-திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு சலுகை விலையில் வழங்கப்படும் லட்டுகள் கறுப்புச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்கும் நோக்கில், அதுவும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.