​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உள்ளாட்சி தேர்தல்: தேமுதிக விருப்ப மனுக்கள் நாளை வழங்கப்படும்

Published : Nov 14, 2019 2:04 PM

உள்ளாட்சி தேர்தல்: தேமுதிக விருப்ப மனுக்கள் நாளை வழங்கப்படும்

Nov 14, 2019 2:04 PM

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் நாளை வழங்கப்படும் என்று தேமுதிக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில் தேமுதிக கட்சி சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனுக்கள் நாளை காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்ட கட்சி அலுவலகங்களில் வழங்கப்பட உள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்கள் வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.